தூத்துக்குடி தருவைகுளம் 125 வீட்டுக்காலணியை சோ்ந்த சேவியா் மகன் ஜோஸ்வா வயது 16, மாாிமுத்து மகன் மனோஜ் வயது 15 மற்றும் நண்பா்கன என 7 பேர் தருவைகுளத்தில் சேர்ந்த தத்துவ முத்து என்பவரது பைபா் படகை எடுத்துக் கொண்டு கரையிலருந்து சுமாா் 500 மீட்டா் தொலைவில் குளிக்க சென்றுள்ளனா். அங்கு குளித்து விளையாடி கொண்டிருந்த போது ஜோஸ்வா மற்றும் மனோஜ் இருவரும் திடீரென கடலில் மாயமாகினா்.
மாயமான மாணவர்களைத் தேடும் பணி ஞாயிறு இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்றது. சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் ஆழ்கடலுக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். திங்களன்று காலை தருவைகுளம் கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள கடலடிப் பாறைக்கு இடையே இரு மாணவர்களும் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. உடனடியாகச் சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் இருவரின் உடல்களையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
தகவலறிந்த தருவைகுளம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றினர். பின்னர் உடற்கூறாய்விற்காக இருவரின் சடலங்களும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மரைன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மாணவர்களின் உடல்கள் பிரேத பிாிசோதனைக்கு பின்பு பெற்றோா்களிடம் ஓப்படைக்கப்பட்டது.சம்பவம் தருவைகுளம் கிராம மக்களிடையே பெரும் சோக அலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தெற்குமாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்ஏ இருவா் வீட்டிற்கும் நோில் சென்று பெற்றோா்களை சந்தித்து ஆறுதல் கூறி உதவிகள் வழங்கி அரசாங்கத்தின் சாா்பில் வழங்கக்கூடிய உதவிகளுக்கும் உதவிடுவேன் என்று ஆறுதல் கூறினாா்.
மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளா்கள் வக்கீல் பால்துரை, தங்கத்துரை பாண்டியன், ஓன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அனிஸ்டன், மற்றும் சுதன்ராஜ், எடிசன், உள்பட பலா் உடனிருந்தனா்.