கரூர் செய்தியாளர் மரியான் பாபு
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.கரூர் மாவட்ட தோழமை இயக்கக் கூட்டமைப்பு சார்பில், மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் படிப்புகளுக்கான நீட்தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் மாவட்ட தோழமை இயக்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், தோழர்களம் நிறுவன தலைவர் தி.க. சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் உரையை ந.சண்முகம் நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வினால் மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்படுவதாகவும்,ஏழை,எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் நலனைப் பாதிக்கும் இந்தத் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.இதில் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த தோழர்களும், மாணவர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.