திருவாரூர் வாசன் நகர் அமைந்துள்ள அருள்மிகு ஸ்கந்த சாய்பாபா திருக்கோயிலில், குரு பூர்ணிமாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.விழாவையொட்டி அதிகாலை முதலே கோயிலில் சிறப்பு பூஜைகள் தொடங்கப்பட்டன. பின்னர் மூலவராக அருள்பாலிக்கும் ஸ்கந்த சாய்பாபாவிற்கும், உற்சவர் சுவாமிக்கும் பால், தயிர், பன்னீர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் ஆபரணங்களால் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாய்பாபாவின் அருளைப் பெற்றனர். குரு பூர்ணிமா தினத்தின் சிறப்பை முன்னிட்டு, குருவை வணங்குவதன் மகத்துவம் குறித்து ஆன்மிக சொற்பொழிவுகளும் நடைபெற்றன.
பக்தர்கள் அனைவரும் சாய்பாபா நாமத்தை ஜெபித்து, குடும்ப நலன், ஆரோக்கியம் மற்றும் உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.