நாகப்பட்டினம்,ஜூலை.29-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரத்தில் மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மகாகாளியம்மன் நடன வீதி உலா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவையொட்டி 27-ம் தேதி துர்க்கை அம்மன் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் செவ்வாய், நேற்று புதன், இன்று வியாழன்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மகாகாளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு நடன வீதி உலா நடைபெறுகிறது.
இதில் புத்தகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் வரும் 31-ந்தேதி (வெள்ளிகிழமை) இரவு அம்மன் வெள்ளை உடுத்தி திருநடனத்துடன் கோவிலுக்குள் செல்லும் நிகழ்ச்சியும், மறுநாள் கஞ்சி வார்த்தல், ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.