ஆவடி காவல் ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் இணை ஆணையர் சிவக்குமார்
மற்றும் செங்குன்றம் துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தீவிர போதை பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது

அதன் அடிப்படையில் எண்ணூர் உதவி ஆணையர் வெங்கட் குமார் மற்றும் காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலானதனிப்படை போலீசார்ராஜேஷ் கேசவன் ரஞ்சித் அன்பு உள்ளிட்டோர் கத்திவாக்கம் ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்

ஒரிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து எண்ணூரில் விற்பனை செய்யப்படுவதாக

எண்ணூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுஇதன் அடிப்படையில் எண்ணூர் கத்திவாக்கம் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட பொழுதுஅங்கு சந்தேகத்துக்கிடமாக இருவர் மூட்டைகளுடன் இருப்பதை கண்டு விசாரணை செய்த பொழுதுவிசாரணையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

இதையடுத்து எண்ணூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில்எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ஷகிலா 52காசிமேடு கடற்கரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் 41 என்பது தெரிய வந்ததுஅவர்களிடமிருந்து 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *