தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர், ஆக- 3. தஞ்சாவூர் தவெக மத்திய மாவட்ட தன்னார்வலர் அணி சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் மத்திய மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் இரா.விஜய்சரவணன் கல்வி ஊக்க தொகை மற்றும் சிறுதொழில் நல பொருள் வழங்கினார்.

தஞ்சாவூர் தவெக மத்திய மாவட்ட தன்னார்வலர் அணி செயலாளர் அஜய்குமரன் ஏற்பாடு செய்திருந்த ஐம்பெரும் விழா மங்களபுரம் பஸ்ஸ்டாப் அருகில் நடைபெற்றது. விழாவில் மத்திய மாவட்ட தன்னார்வலர் அணி அமைப்பாளர் மதன் அனைவரையும் வரவேற்றார்.

ஐம்பெரும் விழா தலைமை சிறப்புரை தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் இரா.விஜய்சரவணன் பேசும்போது:- காமராஜர் பிறந்தநாள் விழாவை இது வரைக்கும் 30- இடங்களில் கொண்டாடிய கட்சி தமிழக வெற்றி கழகம் தான். தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரே அஜண்டா தான் அது சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் இதோட கட்டமைப்பு சேவை தான், அந்த சேவையை தன்னார்வத்தோடு செய்ய வேண்டும் அப்படி செயல்பட முடியாதவர்கள் இந்த கழகத்தில் தங்களை தக்க வைத்துக்கொள்ள முடியாது. இந்த நிகழ்ச்சியில் வரவேறப்புரையாற்றிய மதன் சமூக சேவையை மனமுவந்து செய்பவர். அஜய்குமரன் கொரானா காலத்தில் கொரானாவால் தடை செய்யப்பட்ட பகுதியில் சேவை செய்தவர். இப்படி உள்ளவர்கள் தான் தகன்னார்வ அணியை வெளிகாட்டியுள்ளாகள் அதற்க்கான அவசியம் ஏற்ப்பட்டுள்ளது.

இந்த பகுதி மக்கள் அரசாங்கமே நம்மளதா ஆக்கிடுவோம் என்று தான் நமக்கு வாக்களித்தனர், வாக்களித்த மகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று பேசினார். பின்னர் +2 படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை, சிறு தொழில் செய்பவர்களுக்கு தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, டீகேன், ஊனமுற்றோருக்கு தையல் இயந்திர மோட்டார் மற்றும் அரிசி உள்ளிட்ட லட்சம் ரூபாய் மேல் மதிப்புள்ள பொருள்கள் தவெக மத்திய மாவட்ட தன்னார்வலர் அணி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் இரா.விஜய்சரவணன் பயனாளிகளுக்கு வழங்கினார் பெற்று கொண்டவர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்.

கழக நிர்வாகிகள் Dr.தங்க.கண்ணன், கண்ணாடி குமார், மேலவெளி.முரளி, மத்திய மாவட்ட இ.செயலாளர் பாரி, மத்திய மாவட்ட து.செயலாளர்கள் முருகேசன், ஹேலன்மெர்சி, மருத்துவக்கல்லூரி பகுதி வினோத், தொண்டரணி வினோத், நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழு Dr.K.அருண்பிரசாத், கருப்பையா, பாண்டி, காவியா பிரகாஷ், ஸ்வீட்டி, ராஜ்குமார், கலைவேலன், அமுல்ராஜ், தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *