தேனி மாவட்டம் கம்பம் 33 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் நகராட்சி குடிநீர் குழாய் இணைப்புகளில் இருந்து வரும் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் நகராட்சி ஆணையாளர் உமா சங்கர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்
ஜூனில் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை கடந்த இரு மாதங்களாக மழை பெய்யாமல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தொடர்ந்து கனமழையாகவும் விட்டு விட்டு சாரல் மழை யாகவும் பெய்து வருகிறது நமது அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து நிலச்சரிவு போன்ற பல்வேறு பேரிடர்கள் நடைபெற்று வருகின்றன
இதனால் முல்லைப் பெரியாற்றில் இருந்து லோயர் கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பம்மிங் ஸ்டேஷனில் தண்ணீர் கலங்கலாக வருகிறது அதே நீரை பம்பிங் செய்து நகர பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது
இதுகுறித்து நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் நகராட்சி ஆணையாளர் உமா சங்கர் ஆகியோர் கூறும் போது தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதால் குடிநீர் கலங்கலாக வருகிறது அந்த நீரை பொதுமக்கள் நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும் இது குறித்து கம்பம் பகுதி ஓட்டல்களிலும் குடிநீரை காய்ச்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்