கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக அகில இந்திய காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் மாவட்ட தலைவருமான பேங்க் சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து பாளையம் கூடலூர் வெள்ளியணை மணவாடி தான்தோன்றி மலை வழியாக கரூர் நகருக்கு வருகின்ற பேருந்துகளும் தரகம்பட்டி ஜெகதாபி உப்பிடமங்கலம் வழியாக கரூர் நகரம் வருகின்ற பேருந்துகளும் மாயனூர் மணவாசி புலியூர் காந்திகிராமம் வழியாக வருகின்ற பேருந்துகளும் நேரடியாக பழைய பஸ் நிலையம் வந்து அங்கிருந்து பயனிகளை இறக்கி விட்டுட்டு புதிய பஸ் நிலையம் வருவதற்கு உண்டான வகையில் பேருந்துகள் தடத்தினை மாற்றி தர மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளித்தனர்

உடன் மாவட்ட காங்கிரஸ் கட்சி துணை தலைவர் சின்னையன் நாகேஸ்வரன் ஆர் பி ஜி மாவட்ட தலைவர் போட்டோ பாலு முன்னாள் நகரத் தலைவர் சுப்பன் மாணவர் காங்கிரஸ் தலைவர் சசிகுமார் கிரண்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *