காரைக்கால்:
காரைக்காலில் உள்ள இமாகுலேட் செவிலியர் கல்லூரியில், கல்லூரி முதல்வர் காணிக்கை ஆரோக்கிய மேரி அவர்கள் தலைமையில், உணவு கலப்படம் கண்டறிதல், BIS CARE App பயன்பாடு, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள், நுகர்வோர் புகார் அளிக்கும் முறை மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் Bureau of Indian Standards (BIS) Trainer மற்றும் FEDCOT INDIA Consumer Movement – Puducherry & Karaikal மாநிலச் செயலாளர் திரு. S. சிவகுமார் அவர்கள், உணவு கலப்படத்தை எளிய முறையில் கண்டறியும் வழிமுறைகள், BIS CARE App-இன் பயன்கள், ISI மற்றும் Hallmark முத்திரைகளின் அவசியம், நுகர்வோர் உரிமைகள் மற்றும் ஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் அளிக்கும் நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
மேலும், வீர தமிழரசி வேலு நாச்சியார் பெண்கள் நல அமைப்பின் துணைத் தலைவர் முனைவர் ஜோதி @ புஷ்பவல்லி அவர்கள், பெண்கள் பாதுகாப்பு, தன்னம்பிக்கை, சட்ட விழிப்புணர்வு மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு பயனுள்ள உரையாற்றினார்.
இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்களான விஷ்ணு தேவி, மரியா ஜூலி, முத்தழகி, பிரியங்கா உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கருத்தரங்கில் கல்லூரியின் சுமார் 100 மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, நுகர்வோர் பாதுகாப்பு, தரமான பொருட்களைத் தேர்வு செய்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பயனுள்ள விழிப்புணர்வு தகவல்களைப் பெற்றனர்.