கரூர் செய்தியாளர் மரியான் பாபு
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை..
கரூர் மாவட்ட அதிமுக கழக செயலாளர் K.கமலக்கண்ணன் அறிவுறுத்தலின்படி,
கரூர் மாவட்ட கழக அவைத்தலைவர் திருவிகா தலைமையில் கரூர் மாவட்ட கழக துணைத்தலைவர் மல்லிகா சுப்புராயன் முன்னிலையில் கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் தீரன் சின்னமலை மற்றும் வல்வில் ஓரி ஆகியோரின் நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ படங்களுக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.உடன் வடக்கு மற்றும் கிழக்கு நிர்வாகிகள், பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.