கடலூர் நகர அரங்கத்தில் ‘‘பெண்குழந்தைகளை காப்போம் பெண்குழந்தைகளை கற்பிப்போம்“ மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிப்பது மற்றும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் (04.08.2026) அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் தொலைநோக்கு திட்டத்தில், போதை இல்லாத தமிழ்நாட்டினை உருவாக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பேரணியின் போது, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, போதைப்பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்குவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வு பிரச்சார நடை பேரணியில் பெரியார் அரசு கலைக்கல்லூரி, தேவனாம்பட்டினம், கடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,கடலூர் முதுநகர்,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேணுகோபாலபுரம், மஞ்சக்குப்பம் மாணவ, மாணவிகள் மற்றும் காவல் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள், இணையவழி மோசடிகள், பெண் சிசுக்கொலையை தடுப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை உறுதி செய்வோம், குழந்தை திருமணம் கட்டாய குழந்தைத் திருமணத்தை தடுப்போம், பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை அதிகரிப்போம், பெண்களை சுதந்திரமாகவும் தன்னிறைவு கொண்டவர்களாகவும் மாற்ற செய்வோம், பெண் குழந்தைகளுக்கு மருத்துவ பாராமரிப்பை அளிப்போம், கருவில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிவதைத் தடுப்போம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பாதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சட்ட விழிப்புணர்வுடன் செயல்பட்டு, போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்கலா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.