மன்னார்குடி., ஆகஸ்ட்.05
பாலியல் வன்முறை, போதை கலாச்சாரம் மற்றும் மதவெறி இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வலியுறுத்தி மன்னார்குடியில் மாபெரும் கையெழுத்து இயக்கம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக, மன்னை இராஜகோபாலசுவாமி அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் ஒன்று திரண்டிருந்து ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாலியல் வன்முறை, போதை கலாச்சாரம் மற்றும் மதவெறி இல்லாத அமைதியான தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் மாநிலம் தழுவிய அளவில் ‘ஒரு கோடி கையெழுத்து இயக்கம்’ தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இராஜகோபாலசுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் இன்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் சிறப்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில் மாணவர் பெருமன்றத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ஆர்.தர்சின் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில், கல்லூரி மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து விழிப்புணர்வு முழக்கங்கள் எடுத்துரைக்கப்பட்டன.
சமூகச் சீர்கேடுகளுக்கு எதிரான இந்த உன்னத நோக்கை பாராட்டி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தங்களது பேராதரவை வழங்கியதோடு, மிகுந்த ஆர்வத்துடன் தங்களின் கையெழுத்துக்களைப் பதிவு செய்தனர். ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்க மாணவர்கள் முன்னெடுத்த இந்த முகாம் இப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.