ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாகாண்யம் பகுதி செயல்படும் கல்குவாரியால் நிலத்தடி நீர் பாதிப்பு மற்றும் அதிக வெடி மருந்து பயன்படுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால் உடனடியாக குவாரியை மூடக்கோரி 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது*
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாகாண்யம் பகுதியில் கடந்த 15 வருடங்களாக செயல்பட்டு வரும் கல்குவாரி அரசு விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை 4 மணி அளவில் அதிக வெடி சத்தத்துடன் கல்குவாரியில் வெடி வைக்கப்பட்டு அதன் காரணமாக நில அதிர்வு போல் உணர்வு ஏற்பட்டதாக கூறி அக்கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் இரண்டு மணி நேரம் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க அறிவுறுத்தியதின் பேரில் இன்று சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மனு அளிக்க வந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அரசு விதிகளை மீறும் அந்த குவாரியை மூடக்கோரி மாவட்ட வருவாய் அலுவலர் திவ்யஸ்ரீ இடம் மனு அளித்து பள்ளி அங்கன்வாடி உள்ளிட்டவைகளுக்கு குழந்தைகள் அனுப்ப அச்சம் உள்ளதாகவும் என் நேரத்தில் வெடி அதிர்வு தங்கள் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமோ என்ற நிலையிலேயே வாழ்ந்து வருவதால் அதனை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இதேபோல் இவ்விகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் த.விஜயின் தலைமையில் மனு அளித்தனர்.