புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8–ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரி சுதேசி மில் அருகில் மாநில கழக அமைப்பாளரும், மேனாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தலைமையில் திமுக–வினர் ஒன்றிணைந்து அமைதி பேரணியாக சென்று அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. அனிபால் கென்னடி, பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல். சம்பத், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வே. கார்த்திகேயன், அ. செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன், மாநில துணை அமைப்பாளர் அ. தைரியநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பூ. மூர்த்தி, நந்தா. சரவணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கே.எம்.பி. லோகையன், டி. அருட்செல்வி, உருளையன்பேட்டை சி. கோபால், மங்கலம் எஸ்.எஸ். ரங்கன், கதிர்காமம் ப. வடிவேல், தட்டாஞ்சாவடி தொகுதி டாக்டர் ரோ. நித்திஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் ந. தங்கவேலு, பெ. வேலவன், ஜெ. வேலன், ஆர். ரவீந்திரன், கோபாலகிருஷ்ணன், எஸ். அமுதாகுமார், தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், செ. நடராஜன், வ. சீதாராமன், எல். மணிகண்டன், து. சக்திவேல், கோ. தியாகராஜன், ர. சிவக்குமார், ரா. ஆறுமுகம், ஜெ. மோகன், க. ராஜாராமன், செ. ராதாகிருஷ்ணன், சி. சத்தியவேல், அணிகளின் அமைப்பாளர்கள் மாணவர் அணி எஸ்.பி. மணிமாறன், தொமுச அண்ணா அடைக்கலம், வழக்கறிஞர் அணி ச. பரிமளம், தொண்டர் அணி வீரன் (எ) விரய்யன், விவசாய அணி வெ. குலசேகரன், இலக்கிய அணி சீனு. மோகன்தாசு, மீனவர் அணி ந. கோதண்டபாணி, ஆதிதிராவிடர் நலக்குழு சி. ஆறுமுகம், கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை கி. சங்கர் (எ) சிவசங்கரன், நெசவாளர் அணி ந. செந்தில்முருகன், விளையாட்டு மேம்பாட்டு அணி ந. ரவிச்சந்திரன், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அ. முகம்மது ஹாலிது, மருத்துவர் அணி லூ. ஆனந்த் ஆரோக்கியராஜ், தகவல் தொழில்நுட்ப அணி தாமோ. தமிழசரன், சுற்றுச்சூழல் அணி த. முகிலன், அயலக அணி அ. ஷாஜகான், மகளிர் தொண்டர் அணி சுமதி மற்றும் அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னதாக காலை 8 மணிக்கு வில்லியனூர் தொகுதி திமுக சார்பில் அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் திருவுருவச் படத்திற்கும், அரியாங்குப்பம் தொகுதி திமுக சார்பில் வீராம்பாட்டினத்தில் உள்ள கலைஞர் திருவுருவச் சிலைக்கும் திமுக அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் தலைமையில் திமுக–வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதேபோல், புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளில் அந்தந்த தொகுதி கழகம் சார்பில், கலைஞர் திருவுருவப் படம் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *