செங்குன்றம் செய்தியாளர் ஆகஸ்ட் 7

மாதவரம் , பொன்னியம்மன்மேடு, தணிகாசலம் நகரில் உள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் 32 வது ஆடி மாத திருவிழா நடைபெற்றது.

இதில், ஆலய நிர்வாகி ஜெ. காமேஷ் தலைமையில் 1008 பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம், பாலாஜி நகர் பாலவிநாயகர் கோயிலிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக
ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஊர்வலமாக வந்து கருமாரி அம்மன் ஆலயத்தை அடைந்தது .

பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் ஆராதனைகளை கோவில் பூசாரி செய்திருந்தார். இதில் ஆலய நிர்வாகிகள், ஆண்கள், பெண்கள் ஏராளமானவர்கள்
பால்குடம் சுமந்து அம்மனின் அருளை பெற்று சென்றனர்.
வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் பரிமாறப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *