கடலூர், ஆக. 7:
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான மு. கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, திருப்பாதிரிபுலியூரில் திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. மாநகர திமுக செயலாளர் கே.எஸ். ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐயப்பன், புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, வழக்கறிஞர் கார்த்திக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு, கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.