கல்பாக்கம் ஆக 7
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் புலிப்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் திட்ட இயக்குனர் சீதா லட்சுமி இ.ஆ.பெ அறிவுத்தலின்படி, டான்சாக்ஸ் கீழ் இயங்கும் ரியல் அறக்கட்டளை திட்ட இயக்குனர் முனைவர் லாரன்ஸ் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவு குமாரசாமி,பேபி, பபிதா ஆகியோர் வழிகாட்டுதலின் படி ரியல் அறக்கட்டளை மற்றும் எஸ் ஆர் எம் மருத்துவமனை இணைந்து நேற்று 6 ம் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
புலிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா அசோக்குமார் தலைமை தாங்கினார்.இந்த முகாமில் எஸ் ஆர் எம் நிறுவன மருத்துவர்கள் பிரதீப், பிரவீன்,கார்த்திக், மகப்பேறு மருத்துவர் பிரித்திஹா,மனநல மருத்துவர் நிவேதா, முட்டு மற்றும் எலும்பு பிரிவு அரவிந்தன், காது,தொண்டை சிகிக்சை பிரிவு சக்திமுருகன்,தோல் நோய் பிரிவு தேதஸ்வினி, குழந்தை சிகிக்சை பிரிவு ஸ்வாதி பிரியா, கண் சிகிக்சை தீபிகா மற்றும் ரியல் அறக்கட்டளை பணியாளர்கள் மணிகண்டன்,கீர்த்தனா,மலர்விழி,அஞ்சலி,நடமாடும் நம்பிக்கை மையம் பத்மப்ரியா,அர்ச்சனா, முதலானோர் கலந்து கொண்டனர்.முகாமில் பொது மருத்துவம், கண்,தோல்,மனநலம், மகப்பேறு மருத்துவம், எச். ஐ. வி, பால்வினை நோய், மஞ்சள் காமாலை, கல்லிரல் அழற்சி போன்றவற்றுக்கு சிகிக்சை அளிக்கபட்டது. இதில் 100 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.