தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் நாச்சியார் கோவில் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா அரசு மருத்துவமனையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். செயலாளர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக நாச்சியார் கோவில்,அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சதீஷ்குமார், டாக்டர் தருண்,சித்த மருத்துவர் ஜெயந்தி, முருக்கங்குடி,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில் தாய்பாலின் முக்கியத்துவம் குறித்தும், பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதன் அவசியம் குறித்தும் விளக்கினர். தாய்ப்பால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும், தாய்-சேய் பிணைப்பை வலுப்படுத்தும் என்றும் கூறினர்.
மேலும் பணிபுரியும் தாய்மார்கள் தாய்பால் கொடுப்பதில் உள்ள சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கர்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளான கீரைகள் செவ்வாழைப்பழம்,முந்திரிப் பருப்பு, உள்ளிட்ட பல வகையான சத்தான பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்சியில் வட்டார தலைவர் சு.தங்கவேல் ,மண்டல தலைவர் மோகன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் மற்றும் தாய்மார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் பொருளாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.