தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.டி. ரவிச்சந்திரன் தலைமையில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8 ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது இதனையொட்டி குச்சனூர் திமுக சார்பில் பேரூராட்சியின் பிரதான வீதிகளில் பேரூராட்சி மன்ற தலைவர் பி.டி. ரவிச்சந்திரன் தலைமையில் அமைதி பேரணி மற்றும் குச்சனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் பேரூர் திமுக நிர்வாகிகள் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்