துறையூர் ஆக-07
திருச்சி மாவட்டம் துறையூர் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில்
உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தை (ஆகஸ்ட் 1 முதல் 7 வரை) முன்னிட்டு சங்க தலைவர் கார்த்திகேயன் தலைமையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.


உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு (07-08-2026) இன்று துறையூர் குட்ட கரையில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கும்,
பாலூட்டும் தாய்மார்களுக்கும் தாய்ப்பாலின் மகத்துவத்தை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துறையூர் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் கார்த்திகேயன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அனைத்து தாய்மார்களுக்கும் சங்கத்தின் சார்பாக ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.


நிகழ்வில் துறையூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார்,மருத்துவ அலுவலர் தீப்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்க செயலாளர் பிரபு,பொருளாளர் மாஸ் தினேஷ்குமார், சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் துரைராஜ், அசோக் பெரியசாமி,சந்தர் லோகநாதன்,செந்தில்குமார்,முத்துக்குமார்,ன உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்வை தலைமை செவிலியர் உஷா சிறப்பாக ஒருங்கிணைத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.நிகழ்ச்சியின் நிறைவில் துறையூர் வட்டார மருத்துவ ஆய்வாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *