கோவையில் உள்ள கொடிசியா (CODISSIA) வளாகத்தில் இன்டீரியோ & எக்ஸ்டீரியோ – பில்ட் எக்ஸ்போ 2026′ (Interio & Exterio – Build Expo 2026) கோலாகலமாகத் தொடங்கியது. ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக ‘பி’ அரங்கில் (Hall B), காவேரி குழுமத்தின் (Kavery Group of Companies) புதிய அரங்கு திறப்பு விழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. திறப்பு விழாவில் காவேரி குழுமத்தின் இணை மேலாண்மை இயக்குநர் லயன் வினோத் சிங் ரத்தோர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர்.எஸ். மாருதி, சிபகா (CEBACA) தலைவர் பி. ரவிச்சந்திரன், ஃபைரா தேசியச் செயலாளர் லயன் எஸ். செந்தில்குமார், கோசினா (COZCENA) தலைவர் இ.வி.பி. பழனிசாமி ஆகியோர் காவேரியின் புதிய மூன்று தயாரிப்புகளை அறிமுகம் செய்து வைத்தனர்.

இது குறித்து, காவேரி குழுமத்தின் இணை மேலாண்மை இயக்குநர் லயன் வினோத் சிங் ரத்தோர் கூறுகையில், காவேரி குரூப் ஆப் கம்பெனி கோவை கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு செயல்பட்டு வருகின்றது. 2015ஆம் ஆண்டு தமிழகத்தில் முதன்முறையாக ஏழு வண்ணங்களில் வாட்டர் டேங்களை அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது இந்த கண்காட்சியில் காவேரியின் புதிய மூன்று தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் காவேரி நிறுவனத்தின் தயாரிப்பான புதிய ஸ்டார்ஷிப் (Starship) ஆன்டி-மைக்ரோபியல் அதிநவீன தண்ணீர் தொட்டி 10,000 லிட்டர் கொள்ளளவுடன், 7 லேயர் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இது நுண்ணுயிரிகளை எதிர்க்கும் தன்மை கொண்டதுடன், ISO தரச் சான்று பெற்ற இந்தத் தொட்டிக்கு 15 வருட மாற்று உத்தரவாதமும் வழங்கப்படுகிறது என்றார்.

மேலும், காவேரியின் அடுத்த புதிய தயாரிப்பாக அதிநவீன ஹெவி டியூட்டி கன்ஸ்ட்ரக்ஷன் ஹோஸ் (Heavy Duty Construction Hose) குழாய்களைச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய குழாய்கள் 3/4 அங்குலம் மற்றும் 1 அங்குல அளவுகளில், 30 மீட்டர் நீளத்தில் விற்பனைக்கு வந்துள்ளன. கட்டுமானப் பணிகளுக்கு ஏற்ற வகையில் மிகுந்த வலிமையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, (super strong) சூப்பர் ஸ்ட்ராங் எலக்ட்ரிக் பைக் வளைத்தாலும் உடையாத வகையில் அதிக உறுதியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களது இந்த புதிய தயாரிப்புகளுக்கு பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

​இந்நிகழ்ச்சியில் பல்வேறு சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கௌரவ விருந்தினர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு இந்த கண்காட்சி விழாவைச் சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *