துறையூர் ஜூன் -07
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரத்தில் திமுக சார்பில் டாக்டர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் (07-08-2026) அனுசரிக்கப்பட்டது.
உப்பிலியபுரம் திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்துசெல்வன், அர.ந.அசோகன் தலைமையில் 07/08/2026 அன்று பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட கழக துணை செயலாளர் சோபனபுரம் எஸ்.கனகராஜ், பேரூர் கழக செயலாளர்கள் நடராஜன்,வெள்ளையன்,எரகுடி எம்ஜி.பாலா, அறிவொளி சுப்பிரமணியன், தமிழ் நாடு உணவு ஆணையம் உறுப்பினர் கணேசன்,முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கோட்டப்பாளையம் மனோகரன், சிறுநாவலூர் சுப்பிரமணியன்,ராஜா மரியதாஸ், வரதராஜ், மு.ஒன்றிய கவுன்சிலர் ஜெகநாதன், மாவட்ட பிரதிநிதி ஸ்ரீதர்,தளுகை பாலன்,வைரி மணிகண்டன், ஆதிதிராவிடர் நல குழு தலைவர் மணிவண்ணன், முருகானந்தம், சேகர் மற்றும் ஒன்றிய, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்