தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நகர செயலாளர் ஆர் புருஷோத்தமன் தலைமையில் தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் 8 ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது
இதனையொட்டி போடிநாயக்கனூர் நகர திமுக சார்பில் நகரின் பிரதான வீதிகளில் நகரச் செயலாளர் ஆர் புருஷோத்தமன் தலைமையில் அமைதி பேரணி மற்றும் போடிநாயக்கனூர் தேவர் சிலை ரவுண்டானா முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் பொதுக்குழு உறுப்பினர்கள் எம் சங்கர் ராஜா ரமேஷ் வடக்கு மாவட்ட திமுக ஜ.டி.விங் செயலாளர் மகேஸ்வரன் உள்பட நகர திமுக நிர்வாகிகள் நகராட்சி நகர் மன்ற கவுன்சிலர்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்