தாய்ப்பால் விழிப்புணர்வு நிறைவு விழா-தாய்ப்பால் தானம் வழங்கிய தாய்மார்களுக்கு பாராட்டு
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, கோவை ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் காட்டன் சிட்டி மற்றும் வுமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை இணைந்து நடத்திய “நெக்டர் ஆஃப் லைஃப்” தாய்ப்பால் விழிப்புணர்வு நிறைவு விழா மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.
ரோட்டரி கிளப் ஆஃப் காட்டன் சிட்டி தலைவர் ராஜேஷ் கன்கானி தலைமையில் நடைபெற்ற இதில், நெக்டர் ஆஃப் லைஃப்” திட்டத்தின் தலைவர் தருண் குமார் ரங்கா,மற்றும் அஜய் குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவ கணேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ரோட்டரி உதவி ஆளுநர் ரோஹினி ஷர்மா,மருத்துவர் மிருதுபாஷினி கோவிந்தராஜன் ஆகியோர் கவுரவ விருந்தினராக பங்கேற்றனர்..
விழாவில், தாய்ப்பாலின் முக்கியத்துவம், பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சியில் அதன் பங்கு, தாய்ப்பால் தானத்தின் அவசியம் குறித்து மருத்துவ நிபுணர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குறிப்பாக, தாய்ப்பால் கிடைக்காத பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கியின் மூலம் வழங்கப்படும் சேவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தாய்ப்பால் தானம் வழங்கி பல குழந்தைகளின் உயிர் காக்க உதவிய தானம் வழங்கிய தாய்மார்கள் சிறப்பாக கௌரவிக்கப்பட்டு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ,ரோட்டரி நிர்வாகிகள் பிரதீப் கர்னானி,அர்ச்சனா குமார், மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்..