திருவொற்றியூர் மேற்கு மாட வீதி . பகுதியில் வீற்றிருக்கும் அம்பிகை ஸ்ரீ நவகிரகம் தேவி முக்குந்தம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் இன்று காப்பு கட்டி விரதம் இருந்த 500 பெண்கள் மஞ்சள் சேலை அணிந்து பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
முன்னதாக திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வாசலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது இந்த ஊர்வலத்தை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் தமிழக வெற்றிக்கழக மாவட்ட நிர்வாகிகள் ஆனந்தகுமார் எஸ் ஜி சீனிவாசன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர் இந்த பால்குடம் ஊர்வலமானது சன்னதி தெரு வழியாக வடக்கு மாட வீதி வழியாக சென்று முகுந்த அம்மன் கோவிலில் அம்மனுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்து பின்னர் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாரதனைகள் காட்டப்பட்டது நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களுக்கு பால் பிரசாதமாக வழங்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து மாலை விளக்கு பூஜையும் அம்மனுக்கு காப்பு கட்டுதலும், இரவு தெரு கூத்தும் நடைபெற்றது
வருகின்ற சனிக்கிழமை பகல் சமபந்தி போஜனம், இரவு அம்மன் திருவீதி உலா புறப்பாடும், ஞாயிற்றுக்கிழமை மதியம் கூழ்வார்த்தலும், அபிஷேக ஆராதனைகளும் இரவு அம்மன் முன்னிலையில் காப்புக் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் தீ மிதித்தலும் நடைபெறும், என கோவில் நிர்வாகம் தெரிவித்தனர்