திருவொற்றியூர் காவல் நிலையத்தில் முதியவர் தனக்கு தானே பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

திருவொற்றியூர் காலடிப்பேட்டை புது தெரு பகுதியை சேர்ந்தவர் குமார் என்கிற மிஷின் குமார் (வயது 66) இவருக்கு உஷா, பாரதி, மாரி என்ற மூன்று மனைவிகளும் 5 பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் திருவொற்றியூர் காவல் நிலையம் வந்த குமார் அங்கு இருந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் தன்னை குடும்பத்தினர் சோறு தண்ணீர் கொடுத்து கவனிக்காமல் வீட்டை விட்டு விரட்டி விட்டனர்.கடந்த மூன்று மாதங்களாக புதுவண்ணாரப் பேட்டை வ. உ. சி நகரில் உள்ள தங்கை வீட்டில் இருந்தேன்.எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அவரை அருகில் உள்ள சேரில் இருக்கும் படி கூறியுள்ளார்.

அப்போது குமார் ஒரு விரலை காட்டியுள்ளார். உடனே சப் இன்ஸ்பெக்டர் கழிப்பறை பின்னால் உள்ளது. என்று கூறி சென்று வருமாறு கூறியுள்ளார். வெளியே வந்த குமார் போலீஸ் நிலைய நுழைவுவாயிலில் வைத்து தான் தயாராக கொண்டு வந்த ஒரு லிட்டர் பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார்.

தீ அவர் மீது பற்றி எரிந்தது ம் அலறி துடித்தார். இதைப்பார்த்த அருகில் நின்று கொண்டு இருந்த போலீசார் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் பலத்த காயமடைந்த முதியவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *