காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயம்,
திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் சிரிஷ்டி சிங். இவர் கண்காணிப்பில் காங்கயம் சப்-டிவிசன் இயங்கி வருகிறது. காங்கயம் காவல் நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காங்கயத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக செய்திகள் வெளியான நிலையில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பு, ரோந்து பணி, வாகன சோதனை மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிவுறைகளை வழங்கினார்.