தேனி: தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை நிலுவையின்றி செலுத்துமாறு ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொடுவிலார்பட்டி ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை உரிமைக் கட்டணம் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளுக்கான டெபாசிட் தொகை உள்ளிட்ட அனைத்து வரி இனங்களையும் பொதுமக்கள் வருகின்ற 30.08.2026-க்குள் கொடுவிலார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செலுத்தி, அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது வரி மற்றும் கட்டணங்களை உரிய காலத்திற்குள் செலுத்துவதன் மூலம் கொடுவிலார்பட்டி ஊராட்சியின் நிர்வாகப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படவும், ஊராட்சியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறும் ஊராட்சி செயலர் இ. வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட நிலுவைத் தொகைகளை செலுத்தத் தவறும் பட்சத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன், ஊராட்சி சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. வைத்திநாதன் அவர்களின் உத்தரவுப்படியும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நா. ரவிச்சந்திரன் (கிராம ஊராட்சி), இரா. சரவணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி ஆகியோரின் அறிவுரையின்படியும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ஊராட்சி செயலர் இ. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.