வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில், கேர் டி அமைப்பின் சார்பில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு மனிதவள மேம்பாட்டு கல்வி மற்றும் பாலினக் கல்வி குறித்த சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
வால்பாறையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கேர் டி இயக்குனர் பிரிதிவ்ராஜ் தலைமை வகித்தார். இதில் பிப்த் வீல் இயக்குனர் பேராசிரியர் வெங்கடேசன் தங்கவேல், வழக்கறிஞர் ஆர்த்தி மற்றும் கேர் டி திட்ட ஒருங்கிணைப்பாளர் மெல்வின் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர்.
பயிற்சியின் போது பெண்களின் பாதுகாப்பு, நலன், மனிதவள மேம்பாடு மற்றும் பாலினம் சார்ந்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
பயிற்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வால்பாறை கேர் டி பணியாளர்கள் ராஜேஷ்கண்ணன், கார்த்திகா மற்றும் ஞானத்தாய் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.