தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம், குண்டடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்திராபுரம் விநாயகர் கோவில் அருகே சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சந்திராபுரம் முத்து கவுண்டம்பாளையம், எரகாம்பட்டி, சடையபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (45), நந்தவனம்பாளையத்தைச் சேர்ந்த ராஜசேகர் (41), முத்துநகர் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த நடராஜ் (57) ஆகிய 3 பேரை குண்டடம் போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட 52 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.2,200 ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் குண்டடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.