வல்லநாடு ஆற்றுக்குள் இறங்கி நீரின் அளவை கண்ட மேயர் ஜெகன்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு வல்லநாட்டில் இருந்து குடிநீர் வரும் மெயின் பைப் லைன் உடைப்பு மற்றும் நான்காவது குடிநீர் பைப் லைன் வாழ்வு உடைப்பு ஏற்பட்டதால் கடந்த ஆறாம் தேதி முதல் மாநகர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து பணியில் எல்லாம் முடிவடைந்துள்ளது இந்த நிலையில் வல்லநாடு ஆற்றுப்படுகையில் நீரின் அளவு கடுமையாக குறைந்து உள்ளது. இதனை அடுத்து தொடர்ந்து மாநகர் மக்களுக்கு எந்த விதமான தங்கு தடை இன்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஞாயிற்றுக்கிழமை மேயர் ஜெகன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பின்பு வல்லநாடு கலியாவூர் பம்பிங் ஸ்டேஷனுக்கு மேயர் ஜெகன் சென்றால் அங்கு நீர் வரத்து எவ்வளவு என்று விபரங்களை கேட்டு அறிந்தார். அதன் பிறகு ஆற்றுப்படுகையில் நீர்வரத்தை அதிகப்படுத்துவதற்காக ஹிட்டாச்சி மூலம் வல்லநாடு ஆற்றுப்படுகையில் தோண்டப்பட்டு அதன் மூலம் நீர் எடுக்கப்பட்டு பம்பிங் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது இதனால் கூடுதலாக தண்ணீர் வரும் என்று தெரிய வருகிறது. வல்லநாடு ஆற்றுப்படுகையில் ஹிட்டாச்சி மூலம் தோண்டும் பணியை திடீரென்று மேயர் ஜெகன் வல்லநாடு ஆற்றுக்குள் இறங்கினார் அருகில் இருந்து அதிகாரிகள் உடனடியாக பதறினார்கள்
அதன் பிறகு அதிகாரிகளும் ஆற்றுக்குள் இறங்கினார்கள் அப்போது மேயர் ஜெகன் ஆற்றில் எவ்வளவு நீர் இருக்கிறது என்று அங்கு இருந்த ஒரு கம்பை எடுத்து ஆழம் பார்த்தார் இந்த தண்ணி போதுமானது இல்லை மழைக்காலம் வரும் வரை இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை ஆகையால் மேலும் ஹிட்டாச்சி மூலம் மேலும் கூடுதலாக தோண்டப்பட வேண்டும் அப்போதுதான் தண்ணீர் கூடுதலாக கிடைக்கும் அதன் மூலம் மாநகருக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட முடியும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் தொடர்ந்து ஹிட்டாச்சி மூலம் ஆற்றுப்படுகையில் தொடர்ந்து தோண்டப்பட்டு வருகிறது.
மீண்டும் மேல் ஜெகன் பம்பிங் ஸ்டேஷனுக்கு வருகை தந்து அங்கு தண்ணீரின் அளவு கூடுதலாக வருகிறது என்று அங்கு பொருத்தப்பட்டுள்ள மீட்டரின் அளவை பார்வையிட்டார். மேயர் ஜெகன் கூறுகையில் மாநகர் மக்களுக்கு எந்தவிதமான தடையின்றி தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது இந்த நிலையில் மெயின் பைப் லைன் மற்றும் மெயின் வாழ்வு உடைப்பு ஏற்பட்டதால் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் மாநகர் பகுதிக்கு விநியோகம் செய்யப்படவில்லை பணிகள் எல்லாம் முடிந்து விட்டது
தற்போது வல்ல நாட்டிலிருந்து மாநகருக்கு 50 சதவீதம் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கட்கிழமை காலைக்குள் நூறு சதவீதம் மாநகர் பகுதிக்கு குடிநீர் வந்துவிடும் திங்கட்கிழமை மாலை முதல் மாநகரம் முழுவதும் வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும் அதுவரை போதும் மக்கள் கிடைக்கின்ற குடிநீர் அளவை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஆற்று படுகையில் குறைவான நீர் அளவு உள்ளதால் பொதுமக்கள் குடிநீர் தேவைக்கு மட்டும் நீரை பயன்படுத்த வேண்டும் விரையம் செய்ய வேண்டாம் என மேயர் ஜெகன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன் பிறகு மேயர் ஜெகன் மாநகர் பகுதியில் உள்ள ஒவ்வொரு குடிநீர் மேல்நிலை நீக்கப்பட்டிக்கு சென்று நீரின் வரும் அளவை பார்வையிட்டு எந்தெந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் உத்தரவிட்டு உள்ளார். இந்த நிலையில் பம்பிங் ஸ்டேஷனில் ஆற்று படுகைக்குள் தண்ணீர் எப்படி வருகிறது என்று திடீரென்று பம்பிங் ஸ்டேஷன் மேல்பகுதியில் இருந்து அடிப்பகுதிக்கு செல்லும் பாதை வழியில் உள்ள ஏணியில் திடீரென்று மேயர் ஜெகன் இறங்கி ஆற்று படுகை கீழ் பகுதியில் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.