திருவொற்றியூர். ஆகஸ்ட். 10

திருவொற்றியூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைதி பேரணி கருப்பு வலுடன் ஊர்வலமாக வந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கருப்பு பலூனை உடைத்தும் பிரதமர் மோடி உருவப்படத்தை கிழித்து எதிர்ப்பு


தமிழக மக்களின் உரிமைகளை பறித்து எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு மீண்டும் கொண்டுவரவுள்ள மக்களவை தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக, வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவெற்றியூர் பகுதி தலைவர் கலையரசன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.


இந்தப் பேரணியில், சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும். முன்னாள் எம் பியுமான எம் செல்லகுமார். மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார். மற்றும் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் மதாரம்மா கனி பாரூக். முன்னாள் மாவட்ட தலைவர் எம். எஸ். திரவியம். கீர்த்தி. தொண்டன் சுப்பிரமணி. உள்ளிட்டோர் கலந்து கொண்டு திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள பகுதி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து அமைதி ஊர்வலமாக வடக்கு மாட வீதி வழியாக சென்று சன்னதி தெருவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அதே போன்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து தங்களது எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு பலன்களை உடைத்தும் பாரத பிரதமர் மோடியின் உருவ படத்தை கிழித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *