ஆடி மாதம் என்றாலே பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் அமாவாசையை யொட்டி நீர் நிலைகளில் புனித நீராடி பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.
முன்னோர்கள் உயிரிழந்த நாளில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அவர் களுக்கு திதி கொடுப்பது என்பது வழக்கமான நிகழ்வு. ஆனால் முன்னோர்கள் உயிரிழந்த சரியான நாளில் திதி கொடுப்ப வர்கள் தங்களது முன்னோர்களுக்கு ஒரே நாளில் திதி கொடுக்க நினைப்பவர்கள் ஆடி, புரட்டாசி போன்ற மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் அவர்களுக்கு திதி கொடுப்பது என்பது சிறப்பு வாய்ந்தது, என்று கருதப்படுகிறது.
அந்த வகையில் ஆடி அமாவாசையன்று மதுரை வைகை ஆற்றின் கரையில் திரளானோர் குவிந்தனர். மக்கள் – ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அங்கு விளக்கேற்றி வழிபட்டனர்.
சிவாச்சாரியார்கள் மூலம் மறைந்த தங்களது முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழி பட்டனர். ஒரே நேரத்திகுவிந்த பக்தர்களை அமர வைத்து இந்த தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. சிம்மக்கல் அனுமர் படித்துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்ப ணம் கொடுப்பதற்காக மக்கள் திரளாக சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.