தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் MOU SIGINING CEREMONY CUM EXPORT TALK நிகழ்ச்சி கல்லூரி நிறுவன செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

சென்னையில் சேர்ந்த பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஒமேகா டெக் நிறுவனம் இணைந்து தொழில் கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் MOU கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியில் கணினி அறிவியல் துறை தலைவர் எம் பாபி அனைவரையும் வரவேற்று பேசினார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர் கண்ணப்பன் எல்நினோ காலநிலை சவால்களை எதிர்கொள்ள செயற்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றி மாணவிகளுக்கு புரியுமாறு விளக்கிப் பேசினார்

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு தொழில் சார்ந்த பயிற்சி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் பயிற்சிப் பட்டறைகள் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் இண்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது

ஒமகோ டெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மாணவிகளுக்கு தற்போதைய தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி மற்றும் இதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் பற்றி மாணவிகளுக்கு புரியுமாறு விளக்கி பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் மாணவிகள் ஒமேகா டெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றனர் கணினி அறிவியல் துறை பேராசிரியர் ஆர் அர்ச்சனா நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *