குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அருகே உள்ள வடகுத்து அருள்மிகு சடா முனீஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா யாகம் நடைபெற்றது.
ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு அதிகாலை முதலே கோவில் வளாகத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து வேத மந்திரங்களுடன் மற்றும் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் மகா யாகம் நடைபெற்றது.யாகசாலையில் சிறப்பு பூஜைகள், கணபதி ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு, உலக நன்மை, மழைவளம், விவசாய செழிப்பு, குடும்ப நலன்,திருமண தடைகள் குழந்தை பேரு மற்றும் அனைத்து உயிர்களின் நலனுக்காக சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.


ஆடி அமாவாசையை முன்னிட்டு சடா முனீஸ்வரரை வழிபடுவதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் குலதெய்வ பக்தர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மகா யாகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *