ஈரோடு,
அக்டோபர் -1
ஈரோட்டின் முக்கிய ஒருங்கிணைந்த வர்த்தகம் ஷாப்பிங் பொழுதுபோக்கு மற்றும் லைப் ஸ்டைல் மையமாக வளர்ந்து வரும் பார்ச்சூன் சிட்டி தென்னிந்தியாவின் ப்ரீமியம் சினிமா நிறுவனங்களில் ஒன்றான பிராட்வே சினிமாஸ் உடன் இணைந்து ஈரோட்டில் புதிய தலைமுறை மல்டி பிளக்ஸ் சினிமா அனுபவத்தை அறிமுகப்படுத்த உள்ளது.


இங்கு ஷாப்பிங் உணவு வேலை பொழுதுபோக்கு மற்றும் குடும்ப அனுபவங்களை ஒரே இடத்தில் வழங்கும் பார்ச்சூன் சிட்டியின் தொலைநோக்கு பார்வையும் உலகத்தரமான திரையரங்க அனுபவத்தையும் வழங்கும் பிராட்வே சினிமாஸ் இன் புதுமையான அணுகுமுறையையும் இந்த முக்கிய கூட்டணியின் மூலம் ஒன்றிணைக்கின்றன.


பார்சன் சிட்டி வளாகத்தில் அமைய உள்ள பிராட்வே சினிமாஸ் ஈரோடு மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு மேம்பட்ட திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.
இந்த புதிய சினிமா திட்டம் ஜனவரி 2028 க்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

பிராட்வே சினிமாஸ் பற்றி உரிமை யாளர் கூறுகயில் 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிராட்வே சினிமாஸ் தி தியேட்டரிக்கல் சூப்பர் ஸ்டார் ஆப் சவுத் இந்தியா என்ற அடையாளத்துடன் அதிநவீன திரையரங்க தொழில்நுட்பங்கள் பிரீமியம் பார்வையாளர்கள் அனுபவம் மற்றும் சிறப்பான உணவு அனுபவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறது.

திரைப்படம் என்பது திரையில் படம் பார்ப்பதோடு மட்டும் முடிவடைவதில்லை என்ற நோக்கில் தொழில்நுட்பம் வசதி விருந்தோம்பல் மற்றும் சினிமா மீதான மக்களின் ஆர்வம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு சமூக மற்றும் கலாச்சார மையமாக தனது திரையரங்குகளை பிராட்வே சினிமாஸ் உருவாக்கி வருகிறது.

2023 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் இல் தொடங்கப்பட்ட பிராட்வே சினிமாஸின் ஃப்ளாக் ஷிப் 9 ஸ்கிரீன் மல்டிபிளக்ஸ் பல புதிய பிரிமியம் சினிமா தொழில்நுட்பங்களை இப்பகுதிக்கு அறிமுகப்படுத்தியது.


இதில் தென்னிந்தியாவின் முதல் ஐமேக்ஸ் லேசர் தமிழ்நாட்டின் முதல் இ பி ஐ கியூ பிரீமியம் லாட்ஜ் பார்மெட் பி எல் எப் மற்றும் மாநிலத்தின் முதல் லக்சரி கோல்ட் ஸ்க்ரீன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சிறந்த ஒளி பிரம்மாண்டமான திரை அனுபவம் மற்றும் பார்வையாளர்களுக்கான உயர்தர வசதிகளை மையமாகக் கொண்டு இந்த மல்டிபிளக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் 2026 ஆம் ஆண்டு பிராட்வே சினிமாஸ் தனது அடுத்த கட்ட விரிவாக்க மக திருப்பூரில் 4 ஸ்கிரீன் மல்டிபிளக்ஸ் தொடங்கியது.


இங்கு ஹைப்பர் எக்ஸ் மற்றும் விபிட் என்னும் இரண்டு சிறப்பு பிரீமியம் லார்ஜ் பார்மெட் திரைகள் இடம் பெற்றுள்ளன மேம்பட்ட பிரைட்னெஸ் கான்ட்ரஸ்ட் மற்றும் விமர்சிவ் சவுண்ட் மூலம் உலகத்தரமான சினிமா அனுபவத்தை வழங்கு வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

தற்போது ஈரோடு பார்ச்சூன் சிட்டி உடனான இந்த இணைப்பின் மூலம் பிராட்வே சினிமாஸ் தனது பிரீமியம் திரையரங்க அனுபவத்தை ஈரோட்டிற்கும் கொண்டு வருகிறது ஃபார்ச்சூன் சிட்டி பற்றி ஈரோட்டில் சேலம் ஹை வே கொச்சி தேசிய நெடுஞ்சாலை NH 544 ல் அமைந்துள்ள பார்ச்சூன் சிட்டி சுமார் 42 ஏக்கர் பரப்பளவில் ஷாப்பிங் வர்த்தகம் உணவு பொழுதுபோக்கு வணிகம் நிகழ்ச்சிகள் உள் மற்றும் வெளி விளையாட்டு மற்றும் லைப் ஸ்டைல் அனுபவங்களை ஒரே வளாகத்தில் ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய டெஸ்டினேஷன் ஆக வளர்ந்து வருகிறது.


பார்ச்சூன் சிட்டி வளாகத்தில் டெக்ஸ்வேலி அவன்யூ மால்ஸ் மற்றும் பிக் பாக்ஸ் பஜார் உள்ளிட்ட முக்கிய வர்த்தக மையங்களுடன் பல தேசிய மற்றும் பிராந்திய பிராண்டுகளும் செயல்பட்டு வருகின்றன.

இப்பொழுது இயங்கி வரும் யரா ஹைப்பர் மார்க்கெட், கேஎஃப்சி,மெக் டொனால்ட், ரிலாக்ஸ் பன் ஜோன் ஸ்போர்ட்ஸ் வேலி நம்ம ஆபீஸ் மாப்பிள்ளை ஹால் பிரம்மாண்ட ஈவண்ட் கிரௌண்ட்ஸ் மற்றும் ஈவி இன்ஃப்ரா ஸ்ட்ரக்ச்சர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் தொடர்ந்து புதிய ரீடைல் மற்றும் லைப் ஸ்டைல் பிரான்ச் ஈரோடு மற்றும் கொங்கு மெட்ரோ ரீஜன் பொழுதுபோக்கு துறையில் ஒரு முக்கிய கூட்டணி யாக திகழ்கிறது.


பார்ச்சூன் சிட்டி மற்றும் பிராட்வே சினிமாஸ் ஆகிய இரண்டு முக்கிய பிராண்டுகளின் இந்த இணைப்பு பார்ச்சூன் சிட்டியின் என்டர்டைன்மென்ட் அண்ட் லைப் ஸ்டைல் வளர்ச்சியில் ஒரு முக்கிய மயில்கல் ளாக அமைகிறது. பார்ச்சூன் சிட்டியின் பிரம்மாண்ட டெஸ்டினேஷன் எக்கோ சிஸ்டம் மற்றும் பிராட்வே சினிமாஸ் இன் பிரீமியம் தியேட்டரிக்கல் எக்ஸ்பர்டைஸ் ஆகியவை இணைந்து அதிநவீன தொழில்நுட்பம் வசதி விருந்தோம்பல் மற்றும் உயர்தர பொழுதுபோக்கு அனுபவத்தை ஈரோடு மற்றும் கொங்கு மெட்ரோ ரீஜன் மக்களுக்கு வழங்க உள்ளன இந்த புதிய மல்டிபிளக்ஸ் மூலம் ஷாப்பிங் புட் என்டர்டைன்மென்ட் இவன் ஸ்போர்ட்ஸ் அண்ட் அட்வென்சர்ஸ் பிசினஸ் லேயசுர் என அனைத்தையும் ஒரே இடத்தில் அனுபவிக்கக்கூடிய முழுமையான டெஸ்டினேஷன் ஆக பார்ச்சூன் சிட்டி மேலும் வலுப்பெற உள்ளது பார்ச்சூன் சிட்டியில் அமைய உள்ள பிராட்வே சினிமாஸ் திட்டம்ஜனவரி 2028க்குள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

என பிராட்வே சினிமாஸ் மேனேஜிங் டைரக்டர் திரு.சதீஷ்குமார் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் பார்ச்சூன் சிட்டியின் சேர்மன் லோட்டஸ் ஐ பெரியசாமி மேனேஜிங் டைரக்டர் ராஜசேகர், urc தேவராஜன், எக்ஸிக்யூடிவ் டைரக்டர் குமார். பார்ச்சூன் சிட்டியின் பொது மேலாளர் கோவர்தன் ஆகியோர் முன்னிலையில் பிராட்வே சினிமாவின் ஒப்பந்தத்தினை வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பொது மேலாளர் கோவர்தன் மார்க்கெட்டிங் டீம் திரு.சிவக்குமார் திரு.மதன்குமார் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *