அரியலூரில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும் மாவட்ட தலைவருமான இரா முருகேசன் தலைமை தாங்கினார் மாவட்ட துணைத்தலைவர் டி. ரவிச்சந்திரன் மாவட்ட செயலாளர் தி மா கணேசன் முன்னாள் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் மாவட்ட துணை தலைவர் ராமசாமி அலுவலக உதவியாளர்கள் சங்கத்தின் தலைவர் சூசை மாவட்ட பிரச்சார செயலாளர் சின்னதுரை மாவட்ட இணை செயலாளர் பச்சமுத்து மாவட்ட அமைப்பு செயலாளர் ராமலிங்கம் ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலர் மதலைராஜ் துணைத் தலைவர் அன்புச்செல்வன் இணைச்செயலாளர் முத்துராசு அரியலூர் வட்டாரம் தலைவர் தங்கராஜ் பாலகிருஷ்ணன் மாரியம்மாள் அன்புச்செல்வன் முத்துராசு திருமானூர் நிர்வாகிகள் தி மா கணேசன் சின்னதுரை மனோகரன் பெரியசாமி அனிமாமலர் குலமாணிக்கம் நிர்வாகிகள் ராபர்ட்மனோகர் ஆரோக்கியசாமி சூசை ஜெயங்கொண்டம் ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சதாசிவம் அனைவருக்கும் நன்றி கூறினார் 01/07/2026 முதல் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு கட்டாயப்படுத்தி அமல்படுத்த கூடாது பற்கள் இழப்பு காரணமாக மாற்று பற்கள் பொருத்துதல் மற்றும் முழுமையாக பற்கள் அகற்றி செயற்கை பல் செட் பொருத்துதல் போன்ற சிகிச்சை முறைகள் சேர்க்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது.