ஈரோடு, ஆக.12: ஈரோடு வ.உ.சி பூங்காவில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு வக்ப் வாரிய எண்: G.S 203 CBE-க்குட்பட்ட ஹஜ்ரத் பஸல் ஷா காதிரி, ஜெச்சாபீபி (ரஹ்) அவுலியாக்கள் தர்காவில் பெண்களால் நடத்தப்படும் அமாவாசை சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தர்கா முஜாவரி ஆலிமா எஸ். சமீம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். இதில் எம். ஷாநவாஸ்கான், தர்கா பாதுகாப்பு குழுவின் தலைவர் ம. முகமது அர்சத், செயலாளர் எஸ். ஏ. எம். ஆசாத், அக்பர் அலி, எச். ஜாஃபர் அலி மற்றும் திரளான பெண்கள் முன்னிலை வகித்தனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- தர்கா வளாகத்தில் நீண்ட நாட்களாக கழிவறை வசதி இல்லாததால் பக்தர்கள், குறிப்பாக பெண் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை அறிந்த ஈரோட்டைச் சேர்ந்த எம். ஷாநவாஸ்கான் அவர்களின் குடும்பத்தினர் தர்கா வளாகத்தில் கழிவறை கட்டித் தர ஒப்புதல் அளித்தனர்.
- தர்காவிற்கு சொந்தமான இடத்தினை ஈரோடு மாநகராட்சி ஆக்கிரமித்துள்ளது. அந்த இடத்தை மீட்டு, அங்கு ஒரு பள்ளிவாசல் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டது.
- 11.10.2026 அன்று தர்காவில் சந்தனக்குட விழாவை விமர்சையாக நடத்துவது எனவும், இதற்கான நோட்டீஸ் வழங்குதல் மற்றும் நன்கொடை வசூலிக்க தர்கா முஜாவரி ஆலிமா எஸ். சமீம் மற்றும் தர்கா பாதுகாப்பு குழு செயலாளர் எஸ். ஏ. எம். ஆசாத் தலைமையில் ஒரு குழு அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
- ஹஜ்ரத் பஸல் ஷா காதிரி ஜெச்சா பீபி (ரஹ்) அவுலியாக்கள் தர்காவிற்கு சொந்தமான இடத்தை 1917-ல் நீர் தேக்க தொட்டி அமைக்க ஈரோடு நகராட்சியிடம் அக்கால தர்கா நிர்வாகிகள் மக்கள் சேவைக்காக வழங்கினர். தற்போது தர்காவிற்கு சொந்தமான 25 ஏக்கர் 10 சென்ட் நிலத்தை மார்க்கெட் மற்றும் வணிக நோக்கில் ஈரோடு மாநகராட்சி பயன்படுத்தி வருகிறது.
இப்பகுதியை ஆட்சிபுரிந்த மன்னர் ஹைதர் அலி 1772-ல் இந்த தர்காவிற்கு மானியமாக நிலம் வழங்கும்போது, அதில் வரும் வருமானத்தை வைத்து தர்காவிற்கு வரும் அரதேசி, பரதேசி, பக்ரிகளுக்கு தினசரி அன்னமிடவும், குழந்தைகளுக்கு பால் கொடுக்கவும் நேர்ச்சை செய்து வக்ப் செய்தார். ஆனால் இன்று எந்தவித வசதிகளுமின்றி தர்கா ஏழ்மை நிலையில் உள்ளது. எனவே வணிக நோக்கில் செயல்படும் ஈரோடு மாநகராட்சி, தர்காவிற்கு மாதம் ரூ. 4 லட்சம் வாடகையாக வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கலந்து கொண்டோர்:
இந்நிகழ்ச்சியில் வாசிக் ரஷீன், பி. எஸ். சிராஜுதீன், மு. மெஹபூப் உசேன், முனவர் பாய், சர்பூன், எஸ். ஷர்மிளா, யாஸ்மீன், சி. ஷாஹிலா, எம். ரஜியா, தவுலத், ஜே. ரஷீதா, எம். எஸ். சன்ஜீதா, ஸ்ரீமதி, பூங்கொடி, என். பமீனா பானு, இ. பாபு, அ. ரவிக்குமார், ஷாஹிரா பானு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் தர்கா முஜாவரி ஆலிமா எஸ். சமீம் அவர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள். வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு மற்றும் தப்ரூக் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் இறைநேச செல்வர்களின் புகழ்ச்சி பாடல்கள் பாடப்பட்டு, மௌலுத் ஓதி கூட்டுப் பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.