கல்பாக்கம், ஆக. 13: செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் ஒன்றியம், கூவத்தூர் ஊராட்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவர் கே.பி. சகாதேவன் தலைமையில், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பழக்கத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது, புகையிலைப் பயன்பாட்டை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.