காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
.
காங்கேயம்.
ஊதியூர் அருகே சாலையைக் கடக்க முயன்றவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற தனியார் நிறுவன காவலாளி உயிரிழந்தார்.
காங்கயம் அடுத்துள்ள செங்கோடம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (65). இவர் ஊதியூர் அடுத்துள்ள நொச்சிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு 7.30 மணியளவில், நொச்சிபாளையத்தில் இருந்து செங்கோடம்பாளையம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தாராபுரம்-காங்கயம் சாலையில், ஊதியூர் அருகேயுள்ள வறட்டுக்கரை என்ற பகுதியில் சென்றபோது சாலையைக் கடக்க முயன்ற அப்பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவரின் மீது, ஐயப்பன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த ஐயப்பனுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த பூபதி, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.