பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் மலைக்கோயிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு 12.08.2026 புதன்கிழமை காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

காலை 7 மணியளவில் கைலாசநாதர் சுவாமி மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தீபாராதனையும் நடைபெற்றது.

உலக நன்மைக்காக நடைபெற்ற கூட்டு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து லட்சுமிபுரம் M. பழனிச்சாமி மற்றும் லட்சுமிபுரம் கிராம பொதுமக்கள் சார்பில் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்புக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். ஆடி அமாவாசை சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *