கோவையில் மின்சாரம் மற்றும் மின்னணு துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில், எலக்ட்ரோடெக் 2026 8 வது எடிஷன் கண்காட்சி கோவையில் நடைபெற உள்ளது.

வரும் ஆகஸ்ட் 21 முதல் 24-ம் தேதி வரை கோவை கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ள நிலையில்,
இது தொடர்பாக கொடிசியா தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது..

இதில் கண்காட்சி தலைவர் கோவர்தன் மற்றும் கொடிசியா தலைவர் ரங்கசாமி மற்றும் கண்காட்சி துணை தலைவர் கார்த்திக்,கொடிசியா செயலாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியின் சிறப்பம்சங்கள் குறித்து தெரிவித்தனர்.

மின்சார உற்பத்தி, மின் விநியோகம், தொழில்துறை மின்னணுவியல், தானியங்கி தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய தயாரிப்புகள் கண்காட்சியில் இடம்பெற உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர் என பல்வேறு தரப்பினரும் பயன்பெறும் வகையில் கண்காட்சி அமைய உள்ளதாக கூறினர்.

மின்சாரத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இந்தக் கண்காட்சி முக்கிய வாய்ப்பாக அமையும் என தெரிவித்தனர்.

குறிப்பாக தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதுடன், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு இதுபோன்ற கண்காட்சிகள் முக்கிய பங்காற்றும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து முன்னணி நிறுவனங்கள் தங்களது நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *