தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பில் கணித மாதிரி வடிவம் உருவாக்குதலுக்கான சாதாரண வகையிட்டு சமன்பாட்டு அடிப்படை என்ற தலைப்பில் கருத்தரங்கம் கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் என்.எம்.ஆர். வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா கல்லூரி துணை முதல்வர் டாக்டர் வி வாணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் கணிதவியல் துறை தலைவர் ஜி. நித்யா அனைவரையும் வரவேற்று பேசினார் இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் கணிதவியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் மைவிழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கணிதச்சமன்பாடுகள் மாதிரிகளை எளிமையான கணித கட்டமைப்பிற்குள் கொண்டு வருதல் கணித மாதிரி யாக்கத்தில் உள்ள படிகள் மற்றும் கருத்துக்கள் கணித மாதிரிகளின் வகைகள் மற்றும் உறுதிப்படுத்துதல் சிக்கலான கணித மாதிரிகளின் பல்வேறு வடிவங்கள் சிக்கல்களையும் அமைப்புகளையும் கையாளும் முறைகள் குறித்து கணிதவியல் துறை மாணவிகளுக்கு புரியுமாறு விளக்கிப் பேசினார்
மேலும் இது குறித்த மாணவிகளின் ஐயங்களுக்கு சரியான விளக்கம் அளித்து மாணவிகள் பயன்பெறுமாறு சில கருத்துக்களையும் கூறினார் இந்த நிகழ்ச்சியில் கணிதவியல் துறை மாணவிகள் அனைவரும் பங்கேற்று பயனடைந்தனர் மூன்றாம் ஆண்டு கணிதவியல் துறை மாணவி ஏ ஹலிமத் சந்தியா நன்றி கூறினார்