தென்காசி தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் 80வது சுதந்திர தின விழா நடந்தது.விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார் முதல்வர் (பொ) ஷீலா நவரோஸ், ஒருங்கிணைப்பாளர் ஐசக் ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாணவ ஆசிரியர் பொன் லோஸ்னி வரவேற்றார்
சுரண்டை விளையாடு கற்றுக்கொள் அறிவியல் பூங்கா ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார் குற்றாலம் ரோட்டரி கிளப் நிர்வாகி சைரஸ், ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி அந்தோனி, சுரண்டை புத்தக திருவிழா குழு உறுப்பினர் செல்வி ஆறுமுகம், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்
மாணவ ஆசிரியர்கள் அருணா, விஷ்ணு, சௌந்தர்யா, அபிநயா, அஸ்வதி ஆகியோர் தலைமையிலான குழுவினரின் சுதந்திர தின கலை நிகழ்ச்சிகள் நடந்தது
உதவி பேராசிரியர்கள் லீதியாள் சொர்ண ஜெயா, ஹெப்சிபா ஜோஸ்லின், ஸ்வீட்லீன், ஜெபா எபனேசர், மரிய சாந்தி, ராஜேஸ்வரி, அனிதா, நூலகர் ஏஞ்சலின், அலுவலக பணியாளர்கள் பிரெட்ரிக் ஜெயசந்திரன், ஷேரன், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் மாணவ ஆசிரியர் சுபா நன்றி கூறினார்