தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420.
தாராபுரம்,
தாராபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நகர்மன்ற உறுப்பினர்கள் இராஜேந்திரன், அன்பழகன், ராஜாத்தி, சாந்தி, முபாரக் அலி, முகமது யூசுப், கல்பனா, முத்துலட்சுமி, உஷா நாபானு, ஷீலாதேவி, தேவி அபிராமி, சீனிவாசன், முரட்டாண்டி, ரா. சரஸ்வதி, ராஜேந்திரன், கமலக்கண்ணன், சாஜிதா பானு, செலின் பிலோமினா, புனிதா, சக்திவேல், சந்திரசேகரன், நாகராஜன், முருகானந்தம், உமா மகேஸ்வரி, மலர்விழி, தனலட்சுமி, ஷாலினி, மீனாட்சி ஸ்ரீதரன், சக்திவேல், செல்வராஜ் மற்றும் நியமன உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.