கும்பகோணம் அருகே உள்ள தேனாம்படுகை விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ,ஈகை உள்ளம் அறக்கட்டளை இணைந்து நடத்திய சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
விழாவின் தொடக்கமாக பள்ளி ஆசிரியர் கமலா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ராமலிங்கம், முதல்வர் மீனாட்சி ,ஈகை உள்ளம் அறக்கட்டளை நிறுவனர் சூர்யா ராஜேந்திரன் ஆகியோர் சுதந்திர தினத்தின் சிறப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து
நிர்வாக அறங்காவலர் வீரராஜன்,செயலாளர் புவனேஸ்வரி திலீப் பொருளாளர் ரக்க்ஷனா அன்பழகன், அறங்காவலர் வழக்கறிஞர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு சுதந்திர தின விழாவின் சிறப்புகள் குறித்தும், விடுதலைக்காக போராடிய தலைவர்கள் குறித்தும் பேசினார்.
விழாவையொட்டி, மாணவ – மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஈகை உள்ளம் அறக்கட்டளை மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.