எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே கதிராமங்கலம் ஊராட்சியில் சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கதிராமங்கலம் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

      இக்கிராம சபைக் கூட்டத்தில்  கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித் தக்கப்பட்டதோடு தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. 

சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகளை புதுப்பிக்க தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்தல், ஐல் ஜீவன் திட்டத்தின் கீழ் 100மூ குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சியினை “வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி” என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

கிராம சபைக் கூட்டம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இக்கூட்டமானது, ஒவ்வொரு கிராமத்திலும் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, பயனாளிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறித்தும், கிராமத்தின் வளர்ச்சி குறித்தும் விவாதிப்பதற்காக மக்களின் பங்களிப்போடு நடத்தப்படுவதாகும். உங்கள் கிராமத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பயனாளிகள் குறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.


வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள செயலியை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்த வேண்டும். வேளாண்மை துறையை சார்ந்த திட்டங்கள் இச்செயலி மூலமாக விவசாயிகளுக்கு கிடைக்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வேளாண்மைத்துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற, விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் அலுவலரை தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொண்;டு பயன்பெற வேண்டும்.
மேலும் அரசுக்கு கல்வியும், சுகாதாரமும் மிக முக்கியமாக கருதப்படுகிறது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வில் பங்கேற்க வேண்டும். தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்களை அனைத்துத் தரப்பு மக்களும் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.


தொடர்ந்து இக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் 5 தூய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பரிசுகளையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 2 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *