80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு

திருவள்ளூர் மாவட்டம், ஜிஎன்டி சாலை இரட்டை ஏரி படகு குழாம் பகுதியில், 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்வாட் அமைப்பின் சார்பில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வசந்த் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.

நிகழ்ச்சியில் குழல் ஓசை ராஜேஷ், ஸ்வாட் அமைப்பின் நிறுவனர் சமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பனை மரங்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்த ஆண்டு முழுவதும் ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்ய வேண்டும் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பனை மரங்களை வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், எதிர்கால தலைமுறைக்கு பசுமையான சூழலை உருவாக்க வேண்டும் என நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *