திருவள்ளூர்:

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் திருவள்ளூர் மாவட்டம் – மணவாள நகர் கிளை சார்பில், நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு. ஏழுமலை அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து தேசியக் கொடியை ஏற்றியதையொட்டி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அறக்கட்டளை சார்பில் 500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், குழந்தைகளுக்கு பரிசு பொருட்களும், ஏழை, எளிய பெண்களுக்கு 300 புடவைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் திரு. சுரேஷ்குமார், மணவாள நகர் கிளை தலைவர் திரு. ரமேஷ், மணவாள நகர் கிளை செயலாளர் திரு. சந்தோஷ் உள்ளிட்ட மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

“பணிகள் பல இருப்பினும்… திருப்பணி செய்வோம்!” என்ற சேவை நோக்கத்துடன், நாட்டுப்பற்று மற்றும் சமூக நலப்பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் சேவைப் பணிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *