கோயம்புத்தூர் மாவட்ட கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கத்தின் கோஜிம்வா சார்பில் மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது.முன்னதாக க லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் வளாகத்தில் சுதந்திர தின கொடியேற்று விழா நடைபெற்றது


இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான திருமலை. எம். ரவி, பொதுச் செயலாளர் வைரம் எஸ். பெரியசாமி, மற்றும் பொருளாளர் பி .சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக மாநில வணிகவரி இணை ஆணையர் சுதா மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா சின்ன வேடம்பட்டி இண்டஸ்ட்ரில அசோசியேஷன் தலைவர் தேவகுமார் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சங்கத்தின் புதிய மாத இதழான கோஜூம்வா இதழை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் வெளியிட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சங்கத்தின் தலைவர் திருமலை எம்.ரவி கடந்த எட்டு ஆண்டுகளாக பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உயர்வு, மூலப்பொருட்கள் விலை ஏற்றம், ஆட்கள் பற்றாக்குறை மற்றும் தொழில் செய்து லாபமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் கிரில் தொழில்முனைவோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ‘பீக் ஹவர்ஸ்’ சார்ஜ், பிக்சட் சார்ஜ், யூனிட் சார்ஜ் மற்றும் மின் கட்டண உயர்வு ஆகியவற்றால் பல ஒர்க்ஷாப்புகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பலர் கடனிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.


இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள, நடப்பு ஆண்டில் சில சிறப்பு செயல் திட்டங்களை சங்கம் முன்னெடுத்துள்ளது. உறுப்பினர்களுக்கு ஜிஎஸ்டி , வங்கி கடன், விபத்து காப்பீடு, உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள் ஆகியவற்றை சங்கத்தின் மூலமாக உரிய கால அவகாசத்தில் செய்து தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதிய தமிழக அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என்றார்.


தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில்மேற்கு மண்டலத்தின் புதிய தலைவராக சிவக்குமார், செயலாளராக அசோக்குமார், மற்றும் பொருளாளராக ஆறுமுகம் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும், துணைத்தலைவர்கள் மதன்குமார், திருமூர்த்தி, லட்சுமணன், பாலசுப்பிரமணியன், துணைச்செயலாளர்கள் கார்த்திகேயன், சிவப்பிரகாஷ், மூர்த்தி, மோகன்ராஜ் மற்றும் கௌரவ தலைவர்கள் விஸ்வநாதன், பூபாலன், சின்னசாமி, வேல்ராஜ் உள்ளிட்டோரும் பொறுப்பேற்றனர்.

கூட்டத்தில் மா. கௌரவ தலைவர்கள் காசொ மதியழகன் நா ஜனார்த்தனன் ஜி.ஆர். கனகராஜ், நடராஜன், ராஜேந்திரன், சீனிவாசன், ஆனைமலை நகரத் தலைவர் திரு நாகராஜ் பொள்ளாச்சி நகரத் சகாயராஜ் பாரூக் தர்மராஜ் அன்னூர் நகரத் தலைவர் திரு கணேஷ் சோமனூர் நகரத் தலைவர் சுரேஷ் கணபதி நகரத் தலைவர் பரமன் வடவள்ளி பகுதி ஆலோசகர்கள் பாண்டியன், ஆறுமுகம் மற்றும் வடவள்ளி நகர நிர்வாகிகள் சுந்தர்ராஜ், மணிகண்டன், சுகுமார் , இடையர்பாளையம் பகுதி நிர்வாகிகள் மகேந்திரன், அரங்கநாதன், கோபாலகிருஷ்ணன், சௌந்தர்ராஜ் உட்பட சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *